Screen Time and its effect !

என் மகனுக்கு 4 வயது ஆகிறது. இது வரை அவனை Zero Screen time என்ற நிலையில் தான் வளர்த்து வந்தேன். கடந்த இரு வாரமாக அவனுக்கு ஒரு 20 நிமிடங்கள் Khan Academy Kids என்ற செயலியை அறிமுகம் செய்தேன்!சரி குழந்தைகள் மிக கஷ்டப்பட்டு வீட்டில் உள்ளார்கள் அவர்களின் கஷ்டத்தை மேலும் அதிகரிக்க கூடாது எனபதால் ஏற்பட்ட முடிவே இது! ஆனால் அவன் மிகவும் விவரமாக அனைத்தையும் டக் டக் என கற்றுக்கொண்டுவிட்டான். நான் கொடுப்பதை பார்த்து அவன் தாத்தா பாட்டி கொடுக்க ஆரம்பித்தார்கள். சிக்கல் அங்கிருந்து தான் தொடங்கியது! அவன் இருவரையும்  எளிதில் ஏமாற்றி அவர்களின் அலைபேசியை வாங்கிவிடுகிறான். அதில் உள்ள YouTube-ஐ போட்டு கொண்டு பார்க்கத்தொடங்கினால் நிறுத்துவதே இல்லை. நான் இத்தனைக்கும் நேரத்தை கணக்கிட்டு கொண்டு தான் இருப்பேன்! ஒரு 25 நிமிடங்கள் சென்றதும் குரல் கொடுப்பேன் . டேய் குட்டிமா நிறுத்து என்று! நான் சொன்னதிலிருந்து ஒரு 10 நிமிடத்திற்கு பிறகு நிறுத்துவான். கொஞ்சம் வருத்தம் தான்! 

 போதும் என்று சொன்னால் அவ்வளவு எளிதில் நிறுத்துவது இல்லை. உடன் பெரிய அழுகை மற்றும் ஆரவாரம்! 
சரி எப்படி இதை மாற்றலாம் என்று யோசித்து நான் செய்த மாற்றம்: அதை போட்டு கொடுக்கும் போதே சொல்லிவிடுவது! நிறுத்து என்றால் நீ அழக்கூடாது என்று கூறிவிட்டேன். பின்னர் 15 நிமிடத்திற்கு Alarm வைத்துக்கொண்டு அவன் கையில் கொடுப்பதை வழக்கமாக மாற்றினேன். கலாட்டா ஓரளவுக்கு குறைந்தது!

சரி,  இரண்டு நாட்களுக்கு என் பணிகளை ஒத்தி வைத்து கைகளில் இருக்கும் பொருட்களுடன் விளையாடினேன். Screen time எல்லாம் மறந்து போய்விட்டான்! இரண்டு பேரும் வேலைக்கு சென்றால் கொஞ்சம் கஷ்டம் தான்!

அப்படி இருக்கும் போது என்ன செய்யலாம்?

  1. வடிவேலு ஒரு படத்தில் கூறி இருப்பார், "எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணிதான் பண்ணனும்" என்று! எவ்வளவு பொருத்தமான advice! இருவரும் வேலைக்குச் சென்றால் தயவு செய்து அனைத்து விஷயத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள்.
  2. தனியாக அவர்களை பார்க்க அனுமதிக்காதீர்கள்.
  3. தேர்ந்தெடுக்கும் காணொலிகள் அனைத்தும் சிறியதாக மற்றும் சிறந்ததாக இருக்க வேண்டும்.
  4. உணவு உண்ணும் பொழுதில் மற்றும் மாலை பொழுதில் முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
  5. பெற்றோர்களாகிய நாம் அவர்கள் எதிரே அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி! 

Screen time என்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன ?

  1. Observation என்று சொல்ல கூடிய உற்று நோக்கும் திறன் குறைபாடு!
  2. Language Development மொழியால் தன்னை வெளிப்படுத்தும் திறனின் குறைபாடு.
  3. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமம்.
  4. அவனுடைய நடத்தையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. Over Active. பல நிறங்களை கொண்ட காணொலிகளை பார்ப்பதால் அவனால் அதை மறக்க முடியவில்லை. ஒரு Imaginary World -ல் செயல்பட ஆரம்பித்தான்.
  5. அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. இதை படுக்கும் முன் பார்ப்பதால், மூளையானது மிக சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. (தூங்கினாலும்!)

 உங்கள் வீட்டில் 18 மாததிற்கு கீழ் குழந்தைகள் உள்ளார்கள் என்றால், Screen time இல்லாமல் இருப்பது மிக நல்லது! 

 

 

Comments