Lockdown Tips For Parents

கோவிட்-19 என்ற இந்த தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகில் உள்ள அனைத்து மக்களையும் புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் நம்மை விட அதிக பாதிப்பு அடைந்தவர்கள் என நம் குழந்தைகளை கூறலாம். பெரியவர்காளாக நமக்கு என்ன நடப்பு என்பது புரியும், ஆனால் ஏதும் புரியாமல் தினமும் வெளிய சென்று நண்பர்களுடன் விளையாடியது, Preschool (அங்கண்வாடி)  செல்வது என அனைத்தும் நின்றுவிட்டது!  இதைப் போன்ற சமயங்களில் என்ன செய்தால் நாம் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து விளையாடவும் வழி வகுக்கலாம் என்பதை அறிய வேண்டும் என்றால் கீழே உள்ளவற்றை படியுங்கள்.

தனியாக நேரம் ஒதுக்கீடு செய்தல்:

இப்பொழுது உள்ள லாக்டவுன் நேரத்தில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால் குழந்தைகளிடம் அதிகம் பேசுவதில்லை. அதைச் செய்யாமல் மாறாக தினமும் ஒரு 20 முதல் 25 நிமிடம் அவர்களுக்கு என்று நேரத்தை செலவு செய்யுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் ஒரு பெற்றோராக இல்லாமல் அவர்களின் நண்பனாக மாறிவிடுங்கள்.

இதனால் என்ன பயன்?

நம் குழந்தைகளிடம் ஒரு Bonding என்று சொல்லக்கூடிய ஒரு பிணைப்பு ஏற்படும். அவர்கள் உங்களிடம் அனைத்தையும் பகிர்வதற்கு தயாராக இருப்பார்கள். 

எந்த குழந்தைகளிடம் எப்படி பிணைப்பு ஏற்படுத்தலாம்?

மிகச்சிறிய குழந்தைகளிடம் என்ன விளையாடலாம்?

  1. அவர்களின் முக பாவனைகளை அவர்களிடம் திருப்பி செய்துகாட்டுதல்.
  2. வீட்டில் இருக்கும் பாத்திரம் மற்றும் கரண்டிகள் வைத்து தாளம் போடுதல். 
  3. கிண்ணங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குதல். (Stack cups)
  4. கட்டுமான தொகுதிகள். (Building Blocks)
  5. புத்தகம் வாசியுங்கள். (Board books for children - English & Tamil )

சற்று பெரிய குழந்தைகளிடம் என்ன விளையாடலாம்? 

  1. வண்ணப் பென்சில்கள் கொண்டு வண்ணம் தீட்டுதல். (Color Pencils & Sketches
  2. Crayons வைத்து வண்ணம் தீட்டுதல்.
  3. வீட்டில் சிறு உதவிகளை செய்தல்.
  4. பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடத்திற்கு உதவி செய்தல்.
  5. நடனம் ஆடுதல், பாட்டு பாடுதல்.

என பல விஷயங்களை செய்யலாம். அனைவரும் மனதளவில் தைரியாமாக நேர்மறை எண்ணங்களோடு நம் குழந்தைகளை இந்த கடினமான சமயத்தை எதிர்கொள்ளும் விதமாக வளர்ப்போம். 

 


Upto 50% Off on Colouring & Activity Books

Comments