Gross Motor Development & importance

பெருந்தசை வளர்ச்சி (Gross Motor Development):

 ஓடுவது , நடப்பது , உடம்பை வளைப்பது,நீட்டுவது ( Stretching ),குதிப்பது போன்றவை நம் குழந்தைகளின் பெருந்தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. அவற்றை நாம் பெருந்தசை வளர்ச்சி (Gross Motor Development)
 என்று சொல்கிறோம்.


பெருந்தசை வளர்ச்சியை மூன்று விதமாக பிரிக்கலாம்.

  1. Locomotor - ஒரு இடத்திலிருந்து வேற இடத்திற்குச் செல்லுதல். எ.கா. ஓடுவது , நடப்பது
  2. Non-locomotor- ஒரே இடத்தில இருந்து கொண்டு செய்யும் செயல்கள் . எ .கா. உடம்பை வளைப்பது, இழுப்பது,தள்ளுவது .
  3. Manipulative skills -  பொருட்களை ஓரிடத்திலிருந்து வேற இடத்திற்கு நகற்றுவது.  எ .கா. பந்தை எறிதல் , பிடித்தல்
இதெல்லாம் ஏன் முக்கியம் ?
பெருந்தசை வளர்ச்சி என்பது குழந்தைகளின் பலம் மற்றும் தன்னம்பிக்கையை கூடுகிறது.அவர்களுக்குத் தேவையான ஒரு சிறிய உடற்பயிற்சி போல அமைந்துவிடுகிறது. இந்த skill அனைத்தும் பிற்காலத்தில் அவர்கள் கால்பந்து ,கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
பொதுவாக Playhome செல்லும் குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளியில் மற்றும் நண்பர்களுடன் விளையாடும் போதும் தேவையான பயிற்சி கிடைத்து விடுகின்றது. 
 
பெருந்தசை வளர்ச்சிக்கு விளையாட்டுகள் :
  1. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடுதல் 
  2.  ஒரு இடத்திலிருந்து நொண்டிக்கொண்டே ஓடுதல் 
  3. வளைந்து வளைந்து ஓடுதல்  (Zig-Zag running )
  4. பந்து எறிதல் மற்றும் பிடித்தல் 
  5. ஒரு வடிவத்தின் மீது நடத்தல் 
  6. உட்கார்ந்து எழுதல் (தோப்புக்கரணம் போடுவது போல )
மேல கூறியவை ஒரு சில எடுத்துக்கட்டுகளே. 
 


நம்ம எல்லாரும் இப்போ வீட்டுக்குள்ளயே இருக்கறதுனால உங்க குழந்தைகளுக்கு தேவையான பயிற்சிகளை நீங்களே கொடுங்கள்.
உடற்பயிற்சி, ஓடுவது , நடப்பது , உடம்பை வளைப்பது,நீட்டுவது ( Stretching ), பந்தை தூக்கி எறிவது அதைப் பிடிப்பது போன்ற விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்தவும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு இவை அனைத்தும் மிக முக்கியம்.

நான் வயது வாரியாக பெருந்தசை இயக்க வளர்ச்சிக்கு எதுவாக ஒரு சில விளையாட்டுகளை பட்டியலிடுகிறேன்.
 (Gross Motor Development)


இரண்டு வயதுக்கு மேல்

  •  ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தவழ்ந்து செல்லுதல் (Crawling )
  • உட்கார்ந்து, எழுந்து நிற்றல்- 10 முறை (Sit, Stand)
  • ஒரு நேர்கோடு வரைந்து ,அதன் மீது நடக்கச் சொல்லலாம்.
  •  ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஓடுதல். (20 அடி)
  •  ஓர் இடத்திலிருந்து மற்றோர்  இடத்திற்கு குதித்தல்.
  •  மிதிவண்டி ஓட்டுதல் 
  • மேலே கீழே பார்க்கச் செய்தல்.


மூன்று  வயதுக்கு மேல்

  • ஓரிடத்திலிருந்து மற்றோர்   இடத்திற்கு நடத்தல்
  •  முயல், தவளைப்போன்று குதித்தல்
  • தலையில் ஏதேனும் பொருள் வைத்து இரண்டு கைகளையும் நீட்டி நடக்கச் செய்தல் 
  •  பெரிய பந்துடன் ஓடுதல்
  •  பந்தைக்  கடத்துதல் (passing)
  •  2 அடிக்குள் பந்து எறிதல் அல்லது வாலியின் உள்ளே பந்து எறிதல் 
  •  எறியப்படும் பந்தைப் பிடித்தல்
  •  பந்தைக் காலால் உதைத்தல், தரையில் பந்தைத் தட்டுதல்.
  •  உடற்பயிற்சி - கை மற்றும் கால்களை  நீட்டுதல்
  •  குனிதல்
  •  கைத்  தட்டுதல் (தலைக்கு மேலே )
  •  படிகளில் ஏறுதல்
  •  கிளிக் கூண்டில் ஏறுதல்
  •  மேலே  ஏறுதல்
  •  கீழே  இறங்குதல்


நான்கு வயதுக்கு மேல் 

மேலே கூறியுள்ள அனைத்தும் இவர்களையும் செய்யச் சொல்லலாம். மேலும் இவர்களுக்கு வழிமுறைகளைக் கூறி அதன் படி நடக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
உதாரணம் : நாம் கை தட்டும் பொது அவர்களும் கை தட்டுதல் , நாம் தலை மேல் காய் தட்டும் போதும் அவர்களும் அதனப் பின்பற்றுதல்.


இதெல்லாம் நமக்கு படிப்பதற்கு சிறிய விஷயமாக இருந்தாலும் இதில் கிடைக்கக்கூடிய பலன் பெரியது.

 

                 

You may also like:

Fine Motor importance 

என்னடா இது நேத்து தான் பொறந்த மாதிரி இருக்கான் , அதுக்குள்ள வளந்துடானே ! இந்த மாதிரி எத்தனை பேர் நெனச்சுட்டு இருக்கீங்க. நானும் உங்கள மாதிரி தான். பிறந்த குழந்தை அதிகம் தூங்குவாங்க, அழுவாங்க , பால் குடிப்பாங்க , poop செய்வாங்க, திருப்பி இதே மாதிரி continue ஆகும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா…

Importance of Shapes & Colors

நீங்கள் அனைவரும் எப்பொழுதாவது இந்த யோசித்தது உண்டா. ஏன் நம் குழந்தைகளுக்கு வடிவங்கள் மற்றும் நிறங்களைப் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும் ? அதன் முக்கியத்துவம் என்ன? இதெல்லாம் எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும் ? நம் உலகம் முழுவதும் நிறங்கள் மற்றும் வடிவங்களால் ஆனாது. அதாவது நம் வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள். தபால்காரருக்கு அடையாளம் எப்படிக் கொடுப்போம் ?…

Comments