Traditional Games- Thayam

பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றுதான் "தாயம் உருட்டுதல்". இது எப்படி விளையாட வேண்டும் என உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த விளையாட்டு மறைமுகமாக நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

  1.  நாம் நம் வாழ்க்கையில் ஓர் இலக்குடன் பயணிக்க வேண்டும் என்பதை "பழம் எடுத்தல்"என்பதன் மூலம் கற்றுத்தருகிறது.
  2. இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது நாம் நிறைய ஏமாற்றங்களை (ஒருவர் காயை வெட்டுவதன் மூலம்) சந்திக்க நேரிடும். எதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் முதலிருந்து முனைப்புடன் முயற்சி செய்து முன்னேற வேண்டும். 
  3. சில சமயங்களில் அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் பயணித்தால் குறிக்கோளை எளிதில் அடையலாம். (அடுத்தவர்களின் காயை வெட்டுவதற்கு வழி இருந்தாலும் அதை செய்யாமல் இருக்கும்போது)
  4. நம் பயணம் நீண்ட நெடிய பயணமாகும். பல முறை தோல்விகளையும் அவமானங்களையும் சந்திக்க நேரிடும். ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல. (சில காய்களை வெட்டுவோம், வெட்டு கூட விழும்)
  5. பகடையில் விழும் எண்ணை பார்த்து அதற்கேற்ப காய் நகர்த்துவதால் ஒரு வரிசை பற்றிய புரிதல் ஏற்படுகின்றது. (கணிதத்திறன் மேம்படுதல்)
  6. கணக்கையே தொடங்காத சிலர் ஒரே ஆட்டத்தில் விறு விறுவென பல இடங்களுக்கு முன்னேறி செல்வார்கள். (தோல்வி நிரந்தரம் அல்ல)
  7. ஒரே காயை மட்டும் நகர்த்திக்கொண்டே இருக்காமல் பல காய்களை லாவகமாக சிறப்பாக வைக்க கற்றுக்கொள்கிறார்கள். அப்பொழுது அவர்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கிறது. (Diversification)

 

வாழ்க்கை என்பது பல வெற்றி மற்றும் தோல்விகளால் ஆனது என்பதை நமக்கு மறைமுகமாக உணர்த்தும் விளையாட்டு! எனக்கு மிகவும் பிடித்தாமன விளையாட்டு. பள்ளி பருவத்தில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடிய நாட்களின் இனிமை தனி ! 

நீங்கள் இந்த விளையாட்டை விளையாடிய அனுபவம் உண்டா? 

இதை எங்கே வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு Link இதோ:

https://amzn.to/3hF2Ytb